Home இலங்கை நாளை கந்தரோடையில் அடிக்கல் நாட்டுகின்றாரா பிரதமர்?

நாளை கந்தரோடையில் அடிக்கல் நாட்டுகின்றாரா பிரதமர்?

0
நாளை கந்தரோடையில் அடிக்கல் நாட்டுகின்றாரா பிரதமர்?

பௌத்த கட்டுமானம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடிக்கல் நாட்டவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் தெரியவருகையில்

யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இலங்கையில் பெருங்கற் காலத்தவர்கள் வாழ்ந்தாக நம்பப்படும் வரலாற்றுச் சான்றுகள் மீட்கப்பட்ட இடங்களில் கந்தரோடை பிரதானமானதாகும்.

செக்கு உட்பட்ட தமிழர்களின் மிகத் தொன்மையான அறிவியல் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கந்தோடையில் காணப்பட்டுள்ளன.

தமிழர்கள் பௌத்த மதத்தை கடந்தகாலங்களில் பின்பற்றினார்கள் என்பதற்கான சான்றுகளாக இன்னமும் சிறிய அளவிலான பௌத்த விகாரைகள் அங்கு காணப்படுகின்றன.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தினரால் குறித்த விகாரைத் தொகுதிகள் தொல்லியல் எச்சங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பௌத்த விகாரைகள் காணப்படும் காணிக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை யாழ்ப்பாணத்தின் நாகவிகாரையை நிர்வகிக்கும் பௌத்த பிக்கு ஒருவர் அறுதியாக பணத்திற்குப் பெற்றிருக்கின்றார்.

அவர், பிரதேச சபை ஊடாக அந்தக் காணியில் கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருக்கின்றார். பிரதேச சபையும் அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது.

இந்நிலையில் நாளை அந்தக் காணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,

குறித்த காணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் கந்தரோடையைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள்,

குறித்த பகுதி தோப்பாம் பள்ளம் என்று அழைக்கப்படுவதாகவும், உக்கிரசிங்கன் என்ற அரசன் காலத்தினது என நம்பப்படும் வரலாற்று எச்சங்கள் பெருமளவில் அந்தப் பகுதிகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாளை அடிக்கல் நாட்டப்படும் காணியில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என பிரதேச சபைத் தரப்பினரைக் கேட்டபோது, வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கான கட்டடம் அமைப்பதற்கே அனுமதி கோரப்பட்டதாக தெரிவித்தனர்.

வலி. தெற்கு பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here