பிந்திய செய்திகள்

மாற்றம் செய்யப்பட்ட தவணை பரீட்சை..!

தவணை பரீட்சைகளை நடத்தும் திகதிகளில் கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இறுதி ஆண்டு பரீட்சையை நடத்துவதற்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேல் மாகாண கல்வி பணிப்பாளரால் ஏனைய அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு ஏனைய மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் குறித்த கடிதம் மூலம் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 4,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான ஆண்டிறுதி பரீட்சையை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடாத்துவதற்கு மேல் மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts