முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் மாணவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது உண்மை தகவல் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் நேற்று சனிக்கிழமை (19.03.2022) மாலைநேர வகுப்பிற்கு செல்வதாக சொல்லிவிட்டு புதுமாத்தளன் கடற்கரைக்கு சென்றுள்ளார்கள். அங்கு போதை பாவனைக்கு உள்ளான மாணவர்களே வீதியில் வீழுந்துள்ளார்கள்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர்கள் உடன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள். மாணவர்கள் பெற்றோருக்கு ஒரு தகவலை வழங்கிட்டு மாலைநேர கல்விக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையும் புத்தக பையுடன் சில மாணவர்கள் புதுமாத்தளன் கடற்கரையில் உலாவுவதாக பிரதேச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் கடத்தப்பட்ட செய்தி உண்மைக்கு முரணானது என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றார்கள்.
இது தொடர்பில் சமூக அக்கறையாளர்களுக்கு பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்தும் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளை கண்டிப்பாகவும் கண்காணிப்புடனும் வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.