பிந்திய செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் ஒரு துணைதூதரகத்தை மூட அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் ஏற்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இரண்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் ஒரு துணை தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இலங்கை துணை தூதரகம் ஆகியன எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரியளவு அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மூடப்படவுள்ள நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் அருகில் அமைந்துள்ள நாடுகளின் இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் துபாயில் உள்ள துணைத் தூதரகம் ஈராக் உடனான இராஜதந்திர உறவுகளை கையாளும் மற்றும் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள துணைத் தூதரகம் நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைக் கையாளும்.

அவுஸ்திரேலியாவின் கெனன்பெராவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்திடம் சிட்னியில் உள்ள துணைத் தூதரகத்தின் செயல்பாடுகளை ஒப்படைக்கப்படவுள்ளன. இலங்கை தற்போது 63 நாடுகளில் தனது தூதரகங்களை கொண்டுள்ளது.

தற்போது இரண்டு தூதரகங்கள் மற்றும் துணை தூதரகம் என்பன மூடப்படுவதால். அந்த எண்ணிக்கை 60 ஆக குறையும். டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள 60 இலங்கை தூதரகங்களை பராமரித்து நடத்திச் செல்வதில் பெரும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை ஏற்கனவே சில நாடுகளில் இயங்கிய இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரங்களை மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts