பிந்திய செய்திகள்

ஐந்து வயது சிறுமி குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமியொருவர்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் தனது தாயுடன் அவர்களது விவசாய நிலத்துக்கச் சென்ற போது, குளவி கலைந்து இருவரையும் கொட்டியுள்ளது.

இதனையடுத்து, இருவரையும் உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தாயும் மகளும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குளவிக்கொட்டுக்குள்ளான தாய் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts