பிந்திய செய்திகள்

இன்று நியூசிலாந்து தூதுவரிடம் இலங்கை நிலவரம் பற்றி எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நியூசிலாந்து தூதுவர் மைக்கல் எட்வர்ட் அப்பிள்டன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Gallery

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கேட்டுக் கொண்டார். மரபு ரீதியான எதிர்க்கட்சியின் வகிபாகத்திலிருந்து விடுபட்ட நவீன மற்றும் முற்போக்கு ரீதியான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுகின்றது.

‘பிரபஞ்சம்’ மற்றும் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் இதற்கு சிறந்த ஆதாரமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Gallery

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவி வரும் இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் நியூசிலாந்து தூதுவர் கவனம் செலுத்தினார்.

இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய பரஸ்பர நட்புறவு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கருத்துத் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts