முதன் முறையாக இலங்கையில் ரயில் ஆசனங்களை இணையவழியூடாக (Online) முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டதோடு இதன் மூலம் ரயில் பயணிகள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்களுக்குமான ஆசனங்களையும் இணையவழியூடாக முன்பதிவு செய்து கொள்ளளலாம்
கொழும்பு கோட்டை – பெலியத்த, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, தலைமன்னார் மற்றும் கண்டி போன்ற நீண்ட தூர ரயில்களுக்கான பயணச் சீட்டுக்களையும் முன்பதிவு செய்வதற்கான வசதியும் கிட்டவுள்ளது.
தற்போது புகையிரத பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்புக்களின் மூலம் இலத்திரனியல் புகையிரத பயணச் சீட்டுக்களை வழங்கவும், அந்த பயணச் சீட்டுக்களை QR குறியீடு மூலம் சரிபார்க்கவும் முடியும் என்பதால் எதிர்காலத்தில் ரயில்வே திணைக்களத்தில் காகிதப் பயன்பாடு குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசன முன்பதிவுக்கான வசதி வழங்கப்பட்டுள்ள பயண இலக்கு மற்றும் ரயில் பெட்டிகளுக்கும் பல நடவடிக்கைகள் பயண அனுமதி பத்திரத்தை கொள்வனவு செய்வதன் மூலம் இதனுடாக சந்தர்ப்பம் கிடைப்பதுடன் மற்றும் Lanka QR உள்ளிட்ட பல முறைகளினூடாக கட்டணத்தை தெலுத்த முடியும்.
அத்துடன், Ticketing (365) சேவையினூடாக பதிவு செய்பவர்கள், புகையிரத நிலையத்திற்குச் சென்று பயணச்சீட்டின் இலக்கத்துடன், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் முன்பதிவு செய்த பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.