பிந்திய செய்திகள்

கர்ப்பிணி மனைவியின் பசியைபோக்க பலாக்காய்பறிக்க சென்றவர் கத்தியால் குத்தி மரணம்

இலங்கையில் தொடரும் மரணங்கள் பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று.எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கர்ப்பிணி மனைவியின் பசியை போக்குவதற்காக காணியின் அருகில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது பக்கத்து வீட்டுக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts