பிந்திய செய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பான அறிவித்தல்

இலங்கையில் டொலர் பிரச்சினை தீரும் வரையில் வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை என ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் பிரச்சினை தீரும் வரையில் அனுமதி வழங்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைக்கு அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts