பிந்திய செய்திகள்

வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது தாக்குதல்

வவுனியா, செட்டிக்குளம், வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்தில் இன்று பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த போது காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்று ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர், பாடசாலை வளாகத்தில் நின்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆங்கில பாட ஆசிரியரான எஸ்.சாந்தகுமார் (வயது- 45) என்பவர் மீதே இவ்வாறு கட்டையினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்கட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் அட்டூழியம்; பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது கொடூர  தாக்குதல்! - ஜே.வி.பி நியூஸ்

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதட்டமான நிலமை நிலவி வந்ததுடன் பொலிஸார் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் ஆசியர் மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts