பிந்திய செய்திகள்

இலங்கை விமானப்படையின் செய்தி – ஆடிப்போன அமைச்சர்கள்!

விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க கூறுகையில், ​​ எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பயணங்களிற்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது.

எனினும், பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை முன்னர் இலங்கை விமானப்படையால் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்களுக்கு , ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள் அவர்களின் பயணங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது விமானப் பயணத்திற்காக இலங்கை விமானப்படைக்கு செலுத்த வேண்டிய 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இன்னும் செலுத்தவில்லை என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts