பிந்திய செய்திகள்

இலங்கை விமான நிலையங்கள் மிக விரைவில் பூட்டப்படும் !
நிதியியல் ஆலோசகர் (குருசுவாமி சுரேந்திரன்)

இலங்கையில் மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூட்டப்பட்டு நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். “இப்பொழுது எரிவாயுவை துறைமுகத்திலிருந்து எடுப்பதற்கு டொலர் இல்லை. எரிபொருட்களை பெற டொலர் இல்லை.

அத்துடன் மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றை பெறுவதற்கும் டொலர் இல்லை. இவ்வாறானதொரு சூழலில் இலங்கையிலிருந்து விமான நிலையங்கள் சேவையை மேற்கொண்டு வருகின்றன. இந்த விமான நிறுவனங்களுக்கு செலுத்தப்படுகின்ற முழுமையான பணம் டொலரில் தான் செலுத்த வேண்டியிருக்கிறது.

எனவே டொலர் இல்லையென்கின்ற நிலை தொடருமானால் கட்டுநாயக்க விமான நிலையம் ஒரு நெருக்கடி அல்லது முடக்க சூழ்நிலைக்குள் தள்ளப்படுமா?” என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நிச்சயமாக. இப்போது வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அடிப்படை வாழ்வாதார விடங்கள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன. ஆகவே வெளிநாட்டு பயணங்கள் கூட மட்டுப்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்போது எல்லா நிறுவனங்களும் டொலரில் தான் தமது கொடுப்பனவுகளை கோருகிறார்கள் என தெரிவித்தார் .

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts