பிந்திய செய்திகள்

அதிகரிக்கவுள்ள மற்றுமொரு கட்டணம்

பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாததாலும், தற்போது ஒரு யுனிட் தண்ணீரின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாலும்
தற்போதைய நிலையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், அதற்கேற்ப நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் செய்யும்போது குறைந்த அழுத்தத்தில் நீர் பாயும் என நீர்வளங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வறண்ட காலநிலை காரணமாக முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts