பிந்திய செய்திகள்

நோயாளர் காவு வண்டி விபத்து-பறிபோன உயிர்

தியத்தலாவ – பண்டாரவளை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரை ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 17 வயதுடைய ரத்கரச்சி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரர் தற்போது ஆபத்தான நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts