பிந்திய செய்திகள்

பேரீச்சம்பழ இறக்குமதிக்கான விசேட ​பண்ட வரி குறைப்பு

பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட ​பண்ட வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பேரிச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபா விசேட பண்ட வரி 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பேரீச்சம்பழ இறக்குமதியின்போது கிலோவொன்றுக்கு விசேட பண்டவரியாக ஒரு ரூபா மாத்திரமே அறவிடப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts