இன்று(28)வவுனியா – ஆச்சிபுரம் பகுதியிலுள்ள விவசாய காணியொன்றில் காயங்களுடன் அவதானிக்கப்பட்ட யானையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த யானையை அவதானித்த பிரதேசவாசிகள் நேற்று முன்தினம்(26) வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை தந்து யானைக்கு நேற்றைய தினம்(27) சிகிச்சையளித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த யானை சிகிச்சை பலனின்றி இன்று(28) காலை உயிரிழந்துள்ளது.













































