இனி வரும் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்லும் போது அல்லது சுற்றுலாக்களில் ஈடுபடும் போது முகப்புத்தகம்(Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நிழற்படங்களை பதிவேற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சுற்றுலாக்களின் போது எடுக்கப்படும் நிழற்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதனூடாக திருடர்களுக்கு நீங்களே உதவி புரியும் நபர்களாக மாறிவிடுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபர் , சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மற்றும் தங்காபரணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.