பிந்திய செய்திகள்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பியவர் கைது

பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பியவர் , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த நபரின் வீட்டினை நேற்றைய தினம் சுற்றிவளைத்த காவல்துறையினர் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts