பிந்திய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் விலை அதிகரிப்பு

எதிர்வரும் 01.04.2022 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையினை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகை அலங்கார நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12 வயதிற்கு குறைவானவர்களுக்கு முடிவெட்ட 250 ரூபாவும்,பொரியர்களுக்கு முடிவெட்ட 300ரூபாவும், சேவ் மட்டும் செய்ய 200 ரூபாவும்,முடியுடன் சேவ் செய்ய 450 ரூபாவும்,முடிவெட்டி தாடிஒதுக்க 600 ரூபாவாகவும், முடி முழுமையாக அகற்ற 700 ரூபாவாகவும்,பெண்பிள்ளைகளுக்கு முடிவெட்ட 500 ரூபாவாகவும்,முடிவெட்டி டை அடிக்க 550 ரூபாவாகவும், மேலதிக சேவைக்கேற்றவகையில் கட்டணங்கள் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts