பிந்திய செய்திகள்

மூடப்படும் அபாயத்தில் தொழிற்சாலைகள்!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுவரும் பல மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்ட போதிலும் டீசல் இன்மையால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு தேவையான டீசலை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts