நடு வீதியில் மண்னெண்ணெயுடன் சிக்கிய பவுசர்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் ஒன்று தொண்டமனாறு பகுதியில் சீரற்ற வீதியின் பள்ளத்தில் சிக்கியுள்ளது.

தொண்டமனாறு பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர் ஒன்றே இவ்வாறு பள்ளத்திற்குள் சிக்கி தடம் புரண்டது.

இதனையடுத்துபவுடசரில் இருந்த மண்ணெண்ணைய் பாதுகாப்பாக பிறிதொரு பவுசரில் மாற்றிக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது