பிந்திய செய்திகள்

யாழில் தொடரும் வன்முறைகள்

நேற்று வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்.

மின்வெட்டு வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.முதியவர்கள் மூவர் வசிக்கும் வீடு மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts