போக்குவரத்தில் இன்று ஈடுபடவிருந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் இன்றிரவு 12 மணி வரை பயணிகள் போக்குவரத்து ரயில்கள் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
நாளைய தினம் சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணியின் பின்னர் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் ரயில்வே போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதனிடையே, குறுந்தூர, நெடுந்தூர பஸ் சேவைகள் இன்று மாலை 6 மணி வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
மேலும் திங்கட்கிழமை காலை 6 மணியின் பின்னரே பஸ் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.













































