பிந்திய செய்திகள்

எரிபொருளால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

கடந்த 30.03.2022 முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் கடற்கரையில் இருந்து கடற்தொழிலுக்கா படகு ஒன்றில் சென்ற இரண்டு மீனவர்கள் எரிபொருள் தீர்ந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்து திருகோணமலை ஆழ்கடல் மீனவர் படகினால் மீட்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 30 ஆம் திகதி புதுமாத்தளன் கடற்கரையில் இருந்து 30 லீற்றர் எண்ணெய்யுடன் கடற்தொழிலுக்கு சென்ற படகு ஒன்று இலங்கையின் கடல் எல்லையினை தாண்டி சென்று கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இன்னிலையில் இவர்கள் கொண்டு சென்ற எரிபொருள் தீர்ந்துள்ள காரணத்தினால் நடுக்கடலில் தத்தளித்துள்ளார்கள்.

31 ஆம் திகதி கரை திரும்பவேண்டியவர்கள் மாலையாகியும் கரை திரும்பவில்லை என்றும் அவர்களின் தொடர்பும் இல்லாத நிலையில் மீனவர்களை காணவில்லை என கடற்தொழில் திணைக்களம் மற்றும் ஏனைய மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு மாத்தளன் பகுதி கடற்தொழிலாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் ஈடுபடும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளன் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.இன்னிலையில் 01.04.2022 அன்று திருகோணமலையினை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகு தத்தளித்த மீனவர்களை கண்டு அவர்களுக்கு உதவிசெய்துள்ளார்கள்.

எரிபொருள் தீர்ந்ததால் இவர்கள் கரைதிரும்பமுடியாத நிலையில் மீனவர்கள் இருவரும் அவர்களின் படகும் பத்திராமாக திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக மாத்தளன் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது இவ்வறான நிலை ஏற்பட்டால் இவர்களை தேடி கண்டுபிடிக்ககூட மீனவர்களிடம் எரிபொருள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts