இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர மற்றைய அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். மேலும்
“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு கையளித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபத்திற்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக சம்மதித்துள்ளனர்.
இதன்படி தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகும் பொதுக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதுடன், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.