பிந்திய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளம் தாய்

02ம் திகதி சனிக்கிழமை தெனியாய – கொட்டப்பொல மெதகொடஹேன, நாரன்தெனிய, கொஸ்மோதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் தாயொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவிக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக கணவரால் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, காயமடைந்த பெண் அம்பியூலன்ஸ் மூலம் தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

இவ்வாறு உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாயான 36 வயதுடையவரெனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெனியாய வைத்தியசாலையில் இருந்து மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts