பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதிய டிப்பர் வாகனம் தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி -பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிசார் கடமையில் இருந்த போதும் NP LN 4676 இலக்கமுடைய குறித்த டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts