பிந்திய செய்திகள்

முள்ளியவளை வாள்வெட்டு -5பேர் விளக்கமறியல்

நேற்று முன்தினம் 02.04.2022 மாலை முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்ற குழு மோதல் வாள்வெட்டு சம்பத்தின் போது 7 பேர் வரையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இளைஞர் குழு நடந்துகொண்ட விதம் தொடர்பில் பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு பகுதியினை சேர்ந்தவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டு 04.04.2022 நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 07.04.2022 ஆம் திகதிவரை விளக்கமறியலில்வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்படைய மேலும் 4பேரை கைதுசெய்யும் நடவடிக்கையிலும் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts