பிந்திய செய்திகள்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் குளத்தினை அளவீடு செய்வதற்கு சென்ற அரச உத்தியோகத்தர் மரணம்

Gallery

நேற்று மாலை 3.00 மணியளவில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 25 வயதுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts