அண்மைக்கால நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியானது உலகிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.உலகில் மிக மோசமான நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபாவும் பதியப்பட்டுள்ளதாக த பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வரும் நிலையில், த பைனான்சியல் டைம்ஸ் இது குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் டொலரின் கொள்முதல் பெறுமதியானது 298 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 70 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 07 சதமாகவும் காணப்படுகிறது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 15 சதம், விற்பனை பெறுமதி 404 ரூபா 71 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.