பிந்திய செய்திகள்

இலங்கை பொலிஸார் விடுத்த அறிவிப்பு

பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் பண்டிகை காலப் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவிலானோர் கொழும்பு நகரிற்கு வருகைத் தருகின்றமையினால், காலி முகத்திடல், புறக்கோட்டை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால், குறித்த பகுதிகளில் தினம் அதிகளவிலான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்ப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதனால், குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள், இயலுமான வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts