பிந்திய செய்திகள்

யாழில் ஏற்பட்ட விபத்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்-துணைவி பகுதியில் நவாலியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அராலி – செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts