பிந்திய செய்திகள்

இலங்கைக்கு பேரிடியான தகவலை தெரிவித்த சர்வதேச நாணய நிதியம்

எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் (IMF) வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமென தெரியவருகிறது.

எவ்வாறாயினும் இந்த கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தக் கோரும் இராஜதந்திர பேச்சுக்களை இலங்கை நடத்த ஆரம்பித்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நிதியமைச்சர் அலி சப்ரியும் அமெரிக்கா செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு இலங்கை அரசிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts