பிந்திய செய்திகள்

உக்ரைனியர்களை நெகிழ வைத்த இலங்கையர்கள்!

இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கை மக்கள் தன்நலம் பாராது தங்களுக்கு செய்யும் உதவி தங்களை நெகிழச் செய்வதாகவும் இலங்கையில் உள்ள உக்ரைனியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் நெருக்கடி சூழல் உக்ரேனியர்களை வாட்டினாலும், போர் காரணமாக அவர்களால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.

ரஷ்ய படைகள் தாக்குதலில் தங்களது அன்புக்குரியவர்களையும், உடமைகளையும் இழந்துவிட்டதாக கூறும் அவர்கள், எங்கு செல்வது என தெரியவில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் நெருக்கடியான சூந்நிலையிலும் இலங்கை மக்கள் தன்நலம் பாராது தங்களுக்கு செய்யும் உதவி தங்களை நெகிழச் செய்வதாக உக்ரைனியர்கள் கூறுகிறார்கள் .

குடும்பத்துடன் இலங்கை வந்த உக்ரைனை சேர்ந்த மகாரன்கா, காலி மாவட்டத்தில் தங்கியிருக்கிறார். அவர் கூறுகையில், தங்களிடம் பணம் இல்லாத நிலையில், இலங்கை மக்கள்தான் தங்க இடமும், உணவும் வழங்குகிறார்கள்; இலங்கை மக்கள் மிகுந்த அன்பை காட்டுகிறார்கள் என நெகிழ்கிறார்.

மறுபுறம் தாங்களும் மனிதர்கள்தான், உக்ரைனியர்களும் மனிதர்கள்தான் என கூறி நெருக்கடியிலும் இலங்கை மக்கள் உதவுவது தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றனர்.

அதேசமயம் ரஷ்யர்களும் பொருளாதார தடைகள் காரணமாக டொலர் பரிமாற்றம் செய்ய முடியாது தவிக்கும் நிலையில், இலங்கை அரசு இரு நாட்டவர்கர்களுக்கும் இலவசமாக விசா நீட்டிப்பு சலுகையை வழங்கியிருக்கிறது.

இதேவேளை உக்ரைன் போர் வெடித்த ஒரு மாதத்தில், இலங்கைக்கு 5 ஆயிரம் உக்ரைனியர்களும், 15 ஆயிரம் ரஷ்யர்களும் வந்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts