பிந்திய செய்திகள்

இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதி சிறுவன் மரணம்

Gallery

இன்று காலை யாழ் நகரில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன், வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.

Gallery

சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ்ப்பாண காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts