பிந்திய செய்திகள்

இலங்கை எயார்லைன்ஸ் எடுத்துள்ள தீர்மானம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்குள் தமது விமான நிறுவனத்திற்கான விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிப்பதே தமது திட்டமென தெரிவித்துள்ளது.

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தற்போது நீக்கப்பட்டுள்ள ஏ 320 மற்றும் 330 ஆகிய இரண்டு விமானங்களுக்கு பதிலாக விமானங்களை பெற்றுக்கொள்வதற்கான 02 முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிதாக விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 02 முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தகைக்கு பெறப்படவுள்ள விமானங்களில் 60 வீதமானவற்றை, நிறுவன பாவனையிலிருந்து நீக்கப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காலப்பகுதியில் சேவையிலிருந்து 03 விமானங்களை நீக்கியதாக தெரிவித்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், 25 நாடுகளுக்கான 40 விமான சேவைகளை வழங்குவதற்கு 24 விமானங்களே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அத்துடன், அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்த தீர்மானத்தை உடன் கைவிடுமாறும் ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts