பிந்திய செய்திகள்

தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவித்தல்

தற்போதைய பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும் என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் எதிர்காலத்திற்கும், அரசியல் கட்சிகளின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து மிகுந்த வருத்தம் அளிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வினைதிறன் மிக்க ஜனநாயக அமைப்பை ஏற்படுத்துவதற்காக, தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழிக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க ஆணையம் முன்மொழிந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் அரசியலமைப்பின் படி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தலாம்.அதன்படி, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பத்தாவது நாளாகவும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணி தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, தற்போதைய அரசாங்கம் மக்களின் கருத்தைக் கேட்டு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை எட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts