நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட புதிய சுகாதார அமைச்சர், வகயஷான் நவனந்த கொரோனா தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேலும் புதுப்பித்துள்ளார்.
அதன்படி, நேற்றிலிருந்து (18.04.2022) வெளியில் கட்டாயம் முகக்கவசம் அணிவது தேவையில்லை, பொதுப் போக்குவரத்து பயணம் செய்யும் போது மட்டுமே இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தேவையில்லை. வாடிக்கையாளர், பார்வையாளர் மற்றும் தனிநபர் விபரங்களை திரட்டுதல் அவசியமில்லை.
இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













































