பிந்திய செய்திகள்

உரங்களை பயன்படுத்த தடை விதித்தது தவறு ஜனாதிபதி மனவருத்தம்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் . அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.

நாளாந்தம் 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே 10 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று இலங்கை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகள் முன் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் ரசயான உரங்களை பயன்படுத்த தடை விதித்தது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது ஆகியவை தவறுதான் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இயற்கை விவாசயத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மத்தியில் செயற்கை ரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இரசாயன உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts