பிந்திய செய்திகள்

இலங்கையில் உயர்மட்டத்தில் ஊழல் – தென்னிலங்கை ஊடகம் செய்தி

இலங்கையில் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் இராணுவ அதிகாரிகளை விடுதலை செய்தல், உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு சிறிலங்கா மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள மிக மோசமான அறிக்கை இதுவாகும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts