Home இலங்கை மட்டக்களப்பில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வர் கைது

மட்டக்களப்பில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வர் கைது

0
மட்டக்களப்பில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வர் கைது

நேற்று (18) மாலை இரட்டைச்சோலைமடு பிரதேசத்தில் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பண்ணை ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது 4 பேரை கைது செய்துள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய துளையிடும் கருவி உட்பட உபகரணங்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த அப்புகாமி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசாருடன் விசேட புலனாய்வு பிரிவினரும் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பண்ணை பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓடியதுடன் 4 பேரை கைது செய்தனர் இவர்களிடமிருந்து துளையிடும் கருவி மற்றம் மின் உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 28 ,55, 48, 43, வயதுடையவர்கள் எனவும் இவர்கள் அம்பாறை மத்தியமுகாம் 11ம் கொலனி, மட்டு புதுக்குடியிருப்பு, வவுணதீவு கண்ணகிபுரம், போரதீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தப்பி ஓடிய பிரதான சூத்திரதாரி கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எனவும் இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here