பிந்திய செய்திகள்

இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது ரம்புக்கனையில், பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்ற நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிவவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மோதல் வெடித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts