பிந்திய செய்திகள்

இன்று பதவிவிலகுகின்றாரா மகிந்த ராஜபக்ஷ??

இன்றைய தினம் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதான செய்தி இலங்கையில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது.

அந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியபோது, ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய வட்டாரத்தில் இருந்துதான் குறிப்பிட்ட அந்தச் செய்தி கசியவிடப்படிருந்ததை அறியமுடிந்தது.

மகிந்த பதவி விலகுவதான செய்திகள் முன்னரும் பல தடவைகள் கசியவிடப்பட்டிருந்தன. மக்களின் அனுதாபத்தைத் தேடிக்கொள்வதற்காக, போராட்டக்கார்களைத் திசை திருப்புவதற்காக இதுபோன்ற செய்திகள் கசியவிடப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றார் இலங்கையில் உள்ள ஒரு ஆரசியல் ஆய்வாளர்.

‘இவற்றை Plant News என்று அழைப்பார்கள்’ என்று குறிப்பிடுகின்ற அந்த ஆய்வாளர், திட்டமிட்டு இதுபோன்ற செய்திகள் உள்ளிருந்தே கசியவிடப்படுவது காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், கொள்கைவகுப்பாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஒன்று என்றும் கூறினார்.

மகிந்த பதவி விலக இருப்பதான செய்திகள், மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் இடையில் சண்டை என்பதான செய்திகள், பசிலை ராஜபக்சக்கள் குடும்பத்தை விட்டு வெளியேற்றிவிட்டார்கள் என்பதான செய்திகள்- இவைகள் அனைத்துமே திட்மிட்டு மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் நாட்டப்படுகின்ற செய்திகளே என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாளைய தினம் மகிந்த பதவி விலகுவது என்பது ஒரு Plant New ஆக இருந்தாலும் சரி, அல்லது உண்மையிலேயே நாளை மகிந்த பதவி விலகினாலும் சரி, அது ஒரு நீண்ட அரசியல் காய்நகர்த்தலின் ஒரு அங்கமாகவே பார்க்கவேண்டும் என்று குறிப்பிடுகின்ற அந்த ஆய்வாளர், மக்களின் ஒட்டுமொத்தக் கோபத்தையும் கோட்டாபாய என்ற தனி நபரின் மீது திசைதிருப்பிவிட்டு, ராஜபக்ச பரம்பரையின் எதிர்கால வாரிசான நாமல் ராஜபக்சவை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு வெளிப்பாடு என்றே இதனைக் கூறுகின்றார்.

மகிந்தவின் பதவியைத் தியாகம் செய்வது, பழிகளை பசிலும், மக்களின் கோபத்தை கோட்டாவும் ஏற்றுக்கொள்வது- இவை அனைத்துமே நாமலை காப்பாற்றி ஆட்சியில் அமர்த்துவது என்ற நீண்டகார செயற்திட்டத்தின் ஒரு அங்கமே என்றும் அவர் சுட்டிக்காண்பிக்கின்றார்.

என்னதான் ஆட்சிமாற்றம் வந்தாலும் நாட்டை பொருளாதாரத்தில் முன்னேற்றி ஒரு சுபீட்சமான ஆட்சியை யாராலுமே வழங்கமுடியாது. அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் அதழபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

சிறிது காலத்தின் பின் மறுபடியும் ஒரு ஆட்சி மாற்றத்தினைக் கோரி மக்கள் வீதிகளில் இறங்குவதையும் யாராலும் தடுக்கமுடியாது.

இப்படி ஒரு கால மாற்றம் ஏற்படுகின்ற சந்தரப்பத்தில் தனது பெயரைக் களங்கப்படுத்திக்கொள்ளத ஒரு தலைவன் ராஜபக்ச குடும்பத்தில் இருக்கவேண்டும்.

நாமல் ராஜபக்சவை அவ்வாறு முன்நிலைப்படுத்தும் நோக்கத்தோடுதான் மகிந்தவின் பதவி விலகலோ, அல்லது பதவி விலகல் பற்றிய செய்தியோ, அல்லது மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் இடையில் சண்டை என்ற செய்தியோ, அல்லது பசிலை ராஜபச்ச குடும்பத்தில் இருந்து விரட்டிவிட்டார்கள் என்ற செய்தியோ இருக்கலாம் என்று கூறுகின்றார் இலங்கையின் நிலவரங்களை உன்னிப்பாக ஆய்வுசெய்துவருகின்ற அந்த அரசியல் ஆய்வாளர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts