பிந்திய செய்திகள்

முகக்கவசம் அவசியம் இல்லை – வைத்தியர் சங்கம் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனே ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளி இடங்களில் இடம்பெறும் கூட்டங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொரோனா பரவலை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts