Home இலங்கை இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் மரணம்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் மரணம்

0
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் மரணம்

இன்று காலை யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றபோதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்தவர்கள் என தொிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து பாதுகாப்பான புகைரத கடவை அமைக்கும்படி கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மக்கள், புகைரத பாதையை மறித்து போராட்டம் நடத்திவருகின்ற நிலையில் அங்கு பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.

Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here