பிந்திய செய்திகள்

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் மற்றுமொரு நாடு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன.

அந்தவகையில் இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்கு உதவிசெய்ய இந்தோனேசியா முன் வந்துள்ளது.

இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் புதன்கிழமை (26) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு நன்கொடையாக 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை வழங்குவதற்கு இந்தோனேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts