பிந்திய செய்திகள்

போராட்டம் நடத்த முடிவு செய்த சுதந்திரக் கட்சி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை மே தின நிகழ்வுகளை நடத்துவதில்லை என்றும், அதற்கு பதிலாக அரசை இராஜிநாமா செய்யும்படி வலியுறுத்தி நாடு முழுவதும் தொகுதி மட்டத்தில் போராட்டங்களை நடத்தவும் சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts