பிந்திய செய்திகள்

சிறுமியின் உயிரை பறித்த ஜம்புப்பழம்!

குருணாகலில் நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதான தெனுரி கேஷலா இதுரங்கொட என்ற குழந்தை தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி மரணம் அடைந்துள்ளார்

இவர் 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய மகளான தெனுரி வாரியபொல ஹம்மாலிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குழந்தை பழத்தினை சாப்பிட்டு விட்டு விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts