பிந்திய செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் புதிய மாற்றம் !

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இலங்கையில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது இணை நிறுவனங்கள், இராணுவம், விமானப்படை, பொலிஸார், ரயில் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்படும்.

மக்கள் ஒன்றுகூடுவதனாலும் வீதிப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதினாலும் கடந்த தினங்களில் எரிபொருள் கொண்டு செல்லும் பணிக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் எதிர்வரும் சில தினங்களுக்குள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts