பிந்திய செய்திகள்

யாழ் இளைஞன் ஒருவருக்கு பிறந்தநாள் அன்று இறந்தநாளாக மாறிய விபத்து

யாழ் – அராலி, வல்லை வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த ரவிகரன் கனிஸ்டன் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் அராலி – வல்லை வீதியில் பயணித்த வேளை, தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வேலி தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts